பொலிஸாரால் கொல்லப்பட்ட நபர்? பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்.

அம்பாந்தோட்டை, கட்டுவான பகுதியில் நேற்றிரவு பொலிஸாருக்கும் பொது மக்களுக்குமிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், நான்கு பொலிஸார் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

கட்டுவான பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்யும் இடமொன்றை சுற்றிவளைக்க முற்படுகையிலேயே பொலிஸாரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொலிஸார் மேற்கொண்ட இந்த தாக்குதலில் 50 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்தையடுத்தே மேற்கண்ட பதற்ற நிலை அப் பகுதியில் தோன்றியுள்ளது.

குறித்த நபர் உயிரிழந்ததையடுத்து கோபமடைந்த அப் பகுதி மக்கள் பொலிஸார் மீது கற்களால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். மேலும் டயர்களை எரித்தும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர். இதானால் நான்கு பொலிஸார் காயடைந்துள்ளனர்.

இதனையடுத்து அப் பகுதிக்கு பாதுகாப்பு நடவடிக்கைக்காக விசேட பொலிஸ் அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டதுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதலை மேற்கொண்டு மக்கள‍ை அவ் விடத்திலிருந்து அப்புறப்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது.