Trending News...

விக்கினேஸ்வரனை கலாய்த்து வவுனியாவில் ஒட்டப்பட்ட துண்டுப்பிரசுரங்கள்.

வடதமிழீழம், வவுனியாவில் முன்னாள் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிகளில் துண்டுப்பிரசுரம் போடப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபையின் ‘எழு நீ’ விருது வழங்கல் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக வவுனியாவில் பல்வேறு இடங்களில் துண்டுப்பிரசுரங்கள் காணப்படுகின்றன

குறித்த துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சுயபுத்தியின்றி சொல்புத்தி கேட்டு 4/5 பெருபான்மையுடன் அமைத்த மாகாணசபையை நாசமாக்கிய 23ஆம் புலிகேசியே வருக வருக.

தமிழர் தேசத்தில் அமையவிருந்த பொருளாதார மத்திய நிலையத்தினை சிங்கள தேசத்தில் அமைக்க காணி வழங்கிய வள்ளலே வருக வருக.

பழைய பேரூந்து நிலையத்தினை மூடி அப்பாவி மக்களினதும் நகர வர்த்தகர்களினதும் மடியில் கை வைத்த பெருந்தகையே வருக வருக. போன்ற பல்வேறு வசனங்களுடன் பாதிக்கப்பட்ட வன்னி மக்கள் என துண்டுப்பிரசுரத்தின் கீழே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.