பொலிஸ் நிலையத்தில் வைத்து தூக்கில் தொங்கிய இளைஞன்.

கட்டுகஸ்தோட்டை பொலிஸ்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் இன்று 31 அதிகாலை பொலிஸ் நிலையத்தில் வைத்து கழுத்தில் சுறுக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலீஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று கஞ்சா வைத்திருந்ததாக சந்தேகத்தின் போரில் கைது செய்யப்பட்ட இவர் பொலிஸ் நிலையத்திலுள்ள சிறைக் கூட்டுல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை வேலையில் இவர் தான் அணிந்திருந்த மேலாடையினால் கழுத்தில் சுறுக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலீஸார் தெரிவித்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் வசித்த 26 வயதுடைய இளைஞர் ஆவார்.

இவரது மரணம் தொடர்பான மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைஇன்று 31 ம் திகதி நடைபெற உள்ளதாகவும் பொலீஸார் தெரிவித்தனர்.

கட்டுகஸ்தோட்டை பொலீஸார்மேலதிக விசாரணைகளை நடாத்துகின்றனர்.