யாழில் கர்ப்பிணி பெண்ணின் தாலியை அறுத்துச்சென்ற கொள்ளையர்கள்

யாழ்ப்பாணம் தென்மராட்சி மீசாலையில் இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவரின் தாலிக்கொடி மோட்டார்ச் சைக்கிளில் வந்த இருவரால் அறுத்துச்செல்லப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் மீசாலை கிழக்கு சிற்றம்பலம் வீதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

குறித்த பெண் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற திருடர்கள் கர்ப்பிணிப் பெண்ணை கீழே விழுத்தி, தாலிக்கொடியினை அபகரித்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தினால் காயமடைந்த பெண் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.