பாரவூர்தியுடன் ரயில் மோதியதில் மூவர் படுகாயம்!

குருணாகலை, மெத்தேகம சந்திக்கருகில் உள்ள ரயில் கடவையில் இடம்பெற்ற ரயில் விபத்தொன்றில் மூவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.

வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடன், பாரவூர்தியொன்று மோதியதிலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

நேற்று (வௌ்ளிக்கிழமை) மதியம் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த மூவரும் குருணாகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் பாரவூர்தி பாரியளவில் சேதடைந்துள்ளதுடன் ரயிலுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.