முகநூலில் கண்ணீர் அஞ்சலி பதிவிட்ட பின் தூக்கில் தொங்கிய குடும்பஸ்தர்.

வவுனியா பத்தினியார் மகிழங்குளத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

இச்சம்பவம் பற்றி மேலும் அறியவருவதாவது

பத்தினியார் மகிழங்குளத்தை சேர்ந்த 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையாரான பாலசுப்பிரமணியம் அஞ்சுதன் என்பவர் இன்று காலை அவரது இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

இதேவேளை தனது முகநூலில் கடந்த 16ம் திகதியே தனது முகநூலில் தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி என்று பதிவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இதேவேளை குறித்த நபர் கடந்த சில காலமாக கடன் தொல்லையில் சிக்கி தவித்து வந்தவர் எனவும் அறியமுடிகிறது