வெளியூரில் மனைவி – சிறுமியை சீரழித்த வளர்ப்பு தந்தை..!

கோவை பெரிய நாயக்கன்பாளையம் அருகே உள்ள காந்திநகர்7-வது வீதியை சேர்ந்தவர் பட்டு ராஜா (வயது 33). இவர் தனது வீட்டில் 11 வயது சிறுமியை வளர்ப்பு மகளாக வளர்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பட்டு ராஜாவின் மனைவி வெளியூருக்கு சென்று இருந்தார்.

அப்போது இரவு நேரத்தில் சிறுமியை பட்டுராஜா பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் நடந்த சம்பவத்தை சிறுமி அக்கம் பக்கத்தினரிடம் கூறி அழுதுள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் சிறுமியை உக்கடத்தில் உள்ள தொன் போஸ்கோ அன்பு இல்லத்தில் சேர்த்தனர்.

இது குறித்து அன்பு இல்ல நிர்வாகி கிருஷ்ணகுமாரி குழந்தைகள் பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பட்டு ராஜா மீது பாலியல் வன்கொடுமை உள்பட 3 பிரிவுகளில் வழக்குபதிவு கைது செய்தனர்.