அரசாங்கத்திற்கு இணையாக நிவாரண பணிகளில் விஜய் நற்பணி மன்றங்கள் அசத்தல்

கிளிநொச்சியில் சில நாட்களாக பெய்து வரும் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இதனால் பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பல உதவி செய்து வரும் வேளை கிளிநொச்சி விஜய் நற்பணி மன்றத்தின் ஒழுங்கைமைப்பில் யாழ் விஜய் நற்பணி மன்றத்தினால் இன்று உலர் உணவுகள் பிரமந்தனாறு மயில்வாகனபுர பாடசாலையில் தங்கியுள்ள மக்களுக்கு வழங்கப்பட்டது.

முதலாம் இரண்டாம் மூன்றாம் நான்காம் கட்டமாக யாழ் கிளி திருகோணமலை வவுனியா மாவட்ட நற்பணி மன்றங்கள் தொடர்ந்து நான்கு நாட்கள் வரை நிவாரணம் வழங்கி உதவ உள்ளனர்.

இவை அனைத்தும் பாரிய பொருட் செலவில் அவர்களின் மன்றத்தினால் மக்களுக்காக வழங்கபட உள்ளமை குறிப்பிடத்தக்கது.