யுவதியின் சங்கிலி அறுத்தவர்கள் போலீஸில் சிக்கினர்

முல்லைத்தீவில் யுவதி ஒருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச்சென்ற இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் யுவதி ஒருவர் உடுப்புக்குளம் பிரதான வீதி வழியே சிலாவத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தார்.

இதன்போது மோட்டார் சையிக்கியில் வந்த இரண்டு நபர்கள் யுவதியை இடைமறித்து அவர் அணிந்திருந்த பெறுமதியான தங்கச் சங்கலியை அறுத்துச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட யுவதி முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்படுசெய்திருந்தார்.

இதன் அடிப்படையில் சிலவத்தை பிரதான வீதியில் இயங்கும் நிறுவனம் ஒன்றில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கமரா பொலிஸாரினால் நேற்று பரிசோதிக்கப்பட்டது.

சிசிடிவி கமராவின் உதவியுடன் சங்கிலி அறுத்த நபர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் சந்தேக நபர்களை பொலிஸார் இன்று கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.