யாழில் பல நாள் திருடன் மாட்டினான். திருடப்பட்ட பொருட்களும் மீட்பு.

ஊர்காவற்துறை பொலிஸ் பிரதேசத்திற்கு உட்பட்ட எழுவைதீவு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நகைகள் திருடியமை மற்றும் தம்பாட்டி பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் இருந்து இலத்திரணியல் உபகரணங்களை திருடியமை தொடர்பில் எழுவைதீவு 1ம் வட்டாரப்பகுதியினை சேர்ந்த 36 வயதுடைய நபரை நேற்று முன்தினம் கைது செய்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் டபள்யூ. வீ.ஏ.விக்குட் வீரசேகர தெரிவித்தார்.

திருட்டு சந்தேக நபரின் வீட்டில் இருந்து திருட்டு போன 15 ½ பவுண் தாலி, 3 பவுண் தோடு 6,360 டொலர் நாணயத்தாள்கள் மற்றும் இலங்கை பணம் 13ஆயிரம் என்பனவும் கைபெற்றப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: எழுவைதீவினை சேர்ந்த பெண் ஒருவர் வெளிநாட்டில் வசித்து வருகின்றார்.

நீண்ட நாட்களின் பின் எழுவைதீவு பகுதிக்கு வந்தவர் அங்கு வீட்டினை திருதத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். தச்சு வேலைக்கு வந்த நபர் வெளிநாட்டில் இருந்து வந்து நின்ற பெண்ணுடன் சகஜமாக பழகி அவர் கொண்டு வந்து வைத்திருந்த பயணப்பைகள் வைக்கும் இடத்தினை அறிந்து கொண்டு நகைளை திருடியுள்ளார்.

இது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. முறைப்பாட்டின் அடிப்படையில் இரு பொலிஸ் குழுக்களை நிஜமித்த பொறுப்பதிகாரி சந்தேக நபரினை கைது செய்திருந்தனர்.

இத் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்ட பொருட்களாக மேலும் 6 கைபேசிகள், அம்பியர் 04, பாடல் ஒலிபரப்பி-02, மைக் உபகரணங்கள், கத்தி-01, என்பனவும் கைபெற்றப்பட்டது.