நேருக்கு நேர் மோதிய டிப்பர்கள். இருவர் வைத்தியசாலையில்.

இரண்டு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதுண்டு வயல்களுக்குள் குடைசாய்ந்தன.

விபத்தில் காயமடைந்த வாகனச் சாரதிகள் யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நாவற்குளி – கேரதீவு ஏ 32 சாலையில் மறவன்புலோ ஆலடிச் சந்தியை அண்மித்த பகுதியில் நேற்று இவ் விபத்து நடந்துள்ளது.

வன்னிப் பகுதியிலிருந்து கருங்கற்கள் ஏற்றிவந்த டிப்பர் வாகனமும், நாவற்குளியிலிருந்து சென்ற டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகின.

காயமடைந்த வாகனங்களின் சாரதிகள் அவ்வழியே வந்த நோயாளர் காவு வண்டியில் யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.