பிள்ளைக்கு ஹிட்லரின் பெயர். தம்பதியினருக்கு சிறை. |பிரித்தானியா

பிரித்தானியாவில் நவ நாஜி தம்பதியர் தங்களின் குழந்தைக்கு ஹிட்லரின் பெயரை சூட்டிய காரணத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவை சேர்ந்த தம்பதிகளான 22 ஆடம் தாமஸ் மற்றும் க்ளவுடியா படடஸ் நாஜி தத்துவங்களை முனைபடுத்துகின்றனர்.

இத்தம்பதிகள் தங்களது குழந்தையின் பெயரின் மத்திய பகுதியில் ஹிட்லரை போற்றும் விதமாக அடால்ஃப் எனப் பெயர் சூட்டியுள்ளனர்.

இவ்விருவருக்கும் வன்முறையை தூண்டும் இனவெறி குறித்த நம்பிக்கைகள் இருந்ததற்கான நெடிய வரலாறு இருக்கிறது என்றும் இவர்கள் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.