யாழில் பித்தளை தாலி கட்டி உறவு கொள்ள நினைத்த மாப்பிளை!!

பித்தளைத் தாலியைக் கட்டி பெண்ணொருவரைத் திருமணம் செய்த கில்லாடி, பதிவுத் திருமணத்துக்கு ஏற்பாடு செய்த போது அங்கிருந்து நழுவப் பார்த்தார். எனினும் உறவினர்களால் மடக்கிப் பிடித்து பொலிஸாரால் ஒப்படைக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் வடமராட்சி பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வடமராட்சி பிரதேசசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு தரகர் மூலம் கொழும்பில் வசிக்கும் நபர் ஒருவர் மணமகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திருமணத்துக்கு முன்னர் சீதனமாக 5 லட்சம் ரூபா பெண் வீட்டார் மாப்பிளைக்கு கொடுத்துள்ளனர்.கடந்த வெள்ளிக்கிழமை செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் திருமணம் நடைபெற்றது.

தாலி கட்டிய பின்னர் பதிவுத் திருமணத்துக்கு தயாராகுமாறு பெண் வீட்டார் மாப்பிளையை அழைத்துள்ளனர்.அவசரமாக கொழும்புக்குச் செல்ல வேண்டும் ஆகவே பதிவுத் திருமணம் வேண்டாம் என்று மாப்பிள்ளை மறுத்துள்ளார்.

மாப்பிள்ளையின் கதையில் பொய் தெரிவதைப் பெண் வீட்டார் கண்டு பிடித்துள்ளனர். பின்னர் மணப்பெண்ணுக்கு கட்டிய தாலியைப் பார்த்த போது அது பித்தளை என்று தெரியவந்தது. மாப்பிள்ளையை வல்வெட்டி துறைப் பொலிஸில் பெண் வீட்டார் ஒப்படைத்தனர்.

மாப்பிள்ளையாக வந்தவர் ஏற்கனவே கொழும்பில் திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளின் தந்தை என்றும் ,பெண்ணுக்கு தோழியாக மாப்பிள்ளையால் பணம் கொடுத்து வவுனியாவில் இருந்தும் அழைத்து வரப்பட்டவர் என்றும் பொலிஸ் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

திருமணப் பெண்ணின் எதிர் காலத்தை கொண்டு விடயத்தைப் பெரிது படுத்தாமல் சீதனமாகக் கொடுத்த பணத்தை மாப்பிளையிடம் இருந்து வாங்கித் தருமாறு பெண் வீட்டார் பொலிஸாருக்கு கூறியுள்ளனர்.

அதன் படி மாப்பிள்ளையாக வந்தவர் சட்டத் தரணி ஒருவர் ஊடாக அந்தப் பணத்தை மீண்டும் பெண் வீட்டாருக்கு ஒப்படைத்து விட்டு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
close