யாழ்.கொழும்புத்துறை- இலந்தைக்குளம் பகுதியில் வாள்வெட்டு

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை இலந்தைக்குளம் பகுதியில் இன்று அதிகாலை வாள்வெட்டுக்குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.

அந்தப்பகுதியில் உள்ள வீடுகளின் கேற், வேலிகள் மற்றும் வீதியோரத்தில் இருந்த தண்ணீர்க் குழாய்கள், வீதித் திருத்தப்பணிக்காக வைக்கப்பட்டிருந்த தார் பரல்கள் போன்வற்றை வாளால் கொத்திச் சேதப்படுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.