மட்டக்களப்பில் ரயிலில் மோதி ஒருவர் பலி.

மட்டக்களப்பு பொலிஸ் தலைமைப் பகுதிக்குட்பட்ட கூழாவடி பகுதியில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (புதன்கிழமை) அதிகாலை கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு வந்த ரயிலில் மோதுண்டே இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் சுமார் 50 வயது மதிக்கத்தக்கவர் எனவும் தலைப்பகுதி முற்றாக சிதைவடைந்துள்ளதன் காரணமாக சடலம் அடையாளம் காணமுடியாத நிலையில் இருப்பதாகவும் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் ரயில்வே பகுதியினரால் மீட்கப்பட்டு மட்டக்களப்பு ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.