‘குழந்தை குட்டி செண்டிமெண்ட் கதையோட இருக்கிறவன் ஒழுங்கா ஓடிப்போயிடு'... விஸ்வாசத்தை வச்சு செய்யும் ரஜினி டயலாக்

ரஜினியின் ‘பேட்ட’யும் அஜீத்தின் ‘விஸ்வாசமும் ஒரே தேதியில் வெளியாவதை ஒட்டி நடக்கும் அட்டக்கத்தி சண்டைகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன.

இந்நிலையில் வெளியான ‘பேட்ட’ ட்ரெயிலரில் வசனங்கள் ஸ்ட்ரெயிட்டாக அஜீத்தின் விஸ்வாசம்’ படத்தைத் தாக்குவதாக சில நாரதர்கள் கொளுத்திப்போட ஆரம்பித்துள்ளனர்.

அஜீத்தின் படம் குடும்ப செண்டிமெண்ட் படம்.அதில் அவர் நயன் தாராவைத் திருமணம் செய்து குழந்தை,குட்டி செண்டிமெண்டோடு இருக்கிறார். ரஜினியின் ட்ரெயிலரில் வரும் வசனத்திலோ, ‘குழந்தை குட்டி செண்டிமெண்டோட இருக்கிறவன் ஒழுங்கா ஓடிப்போயிடு, கொலைவெறி காண்டுல இருக்கேன்’ என்று டயலாக் வருகிறது.

இது நேரடியாக குழந்தை,குட்டி செண்டிமெண்ட் படமான விஸ்வாசத்தைக் குறிவைத்து எழுதப்பட்டது என்ற செய்தி தற்போது வலைதளங்களில் பரவி வருகிறது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு இது போன்ற எத்தனை கொடுமைகளைச் சந்திக்கவேண்டிவருமோ யாமறியோம் பராபரமே.