சாதாரண தர பரீட்சைக்கு சென்ற மாணவியை காணவில்லை.

ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றச் சென்ற தனது மகள் , காணாமல்போயுள்ளார் என்று அந்த மாணவியின் தந்தை, சியாம்பலாண்டுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சியாம்பலாண்டுவப் பகுதியின் தொம்பகாவெலையைச் சேர்ந்த காயத்திரி லக்பிய சேனாதீர என்ற 15 வயதுடைய மாணவியே, இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

பரீட்சை எழுதுவதற்காக நேற்றுக் காலை வழமை போல் பெற்றோரை வணங்கி, ஆசி பெற்று வீட்டிலிருந்து வெளியேறிய அந்த மாணவி – பரீட்சை முடிந்த பின்னரும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த தந்தை, சியாம்பலாண்டுவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். பொலிஸார் விசாரணை வேட்டையில் இறங்கியுள்ளனர்.