நாட்டின் கரையோர பிரதேசங்களுக்குள் உட்புகுந்த கடல்.

மட்டக்களப்பு நாவலடி கடற்கரைப் பகுதிகளில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் கடல் நீர் ஊருக்குள் புகுந்துள்ளது

இன்று மாலை மட்டக்களப்பு நாவலடி கிராமத்திற்குள் திடீரென கடல் நீர் உட்புகுந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சுனாமி அலைகள் போன்று கடல் அலைகள் ஊருக்குள் புகுந்ததால் சுனாமி வரப்போகிறது என்ற பீதியில் மக்கள் பதறியடித்து ஓடியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மன்னார் மாவட்டத்தின் கடற்கரையை அருகில் உள்ள கிராமங்களுக்குள் கடல் நீர் உட்புகுந்தவண்ணம் உள்ளது.

பெரிய வாய்க்கால் மூலம் கடலுக்குள் கழிவு நீரினை அகற்றுவதற்கா அமைக்கப்பட்ட வாய்க்கால் மூலமே வாய்க்கால் நிரம்பிய நிலையிலே கடல் நீரானது மீண்டும் கிராமத்திற்குள் புகுந்துள்ளமையால் மக்கள் அவதிக்கும் அச்சத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.

ஜிம்றோன் நகர், ஜீவபுரம், பனங்கட்டுகொட்டு, சாந்திபுரம், ஸ்ரேசன், எமில்நகர் பகுதிகளில் மழை வெள்ளம் முழுமையாக வற்றாத நிலையில் கடல் நீரின் உட்புகுதலும் மக்களின் பயத்திற்கு காரணமாகின்றது.