அதை அழகாக்க நினைத்த அழகிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.

மூக்கில் மூக்குத்தி போடும் பழக்கம்போய், தொப்புளில் வளையம் மாட்டும் பேஷனையும் தாண்டி, மார்பகத்தை அழகாக்குவதற்காக தங்க நகை பதித்த பெண்ணின் மார்பகத்திற்குள் அந்த நகை சென்று மறைந்ததால், இனி அவர் எந்த காலத்திலும் ஒரு குழந்தைக்கு பாலூட்டவே முடியாது என்று கூறிவிட்டனர் மருத்துவர்கள்.

பிரித்தானியாவின் Prestonஐச் சேர்ந்த Taila Millar (20) என்னும் அழகிய இளம்பெண், தன்னை இன்னும் அழகு படுத்துவதற்காக தனது கழுத்து, நெஞ்சு மற்றும் மார்பகங்களில் வைரக்கல் பதித்த நகைகளை பதித்துக் கொண்டார்.

நகைகள் பதித்த இடங்களிலிருந்து இரத்தம் வரவே, நகை பதிக்கும் நபர், Tailaவின் காயங்களில் பிளாஸ்டர் ஒட்டி அனுப்பி விட்டார்.

வீட்டுக்கு வந்தும் வலியும் உறுத்தலும் அதிகரிக்கவே, மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார் Taila.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது கழுத்திலும் ஒரு மார்பகத்திலும் பதிக்கப்பட்ட நகைகள், தோலுக்கடியில் சென்று மறைந்து விட்டதாகவும், அது பயங்கர இரத்த தொற்றை ஏற்படுத்தலாம் என்றும், அவரால் எப்போதும் இனி ஒரு குழந்தைக்கு பாலூட்டவே முடியாது என்று கூறிவிட்டனர்.

Taila வலியால் துடிக்கவே, அந்த நகைகளை அகற்ற மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும், அவற்றை அகற்ற முடியவில்லை.

பின்னர் பிளாஸ்டிக் சர்ஜனிடம் அனுப்பி வைக்கப்பட்ட Tailaவுக்கு, மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை மூலம் அவரது உடலுக்குள் சென்று மறைந்த நகைகள் அகற்றப்பட்டன.

இனி வாழ்வில் ஒருபோதும் இதுபோல் நகைகளை பதித்துக் கொள்ளமாட்டேன் என்று கூறும் Taila, பலர் இதுபோல் உடலின் பல பாகங்களில் நகைகளை மாட்டிக் கொள்கிறார்கள், ஆனால் அதில் இவ்வளவு ஆபத்து இருக்கிறது என்று யாருமே கூறுவதில்லை என்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பான படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள Taila, அதைப் பார்த்தாவது மற்றவர்கள் கண்ட இடத்தில் வளையம் மாட்டும் பழக்கத்திலுள்ள ஆபத்தை புரிந்து கொள்ளட்டும் என்கிறார்.