கொதிச்ச கறிச்சட்டியால் குழந்தைக்கு நடந்த கொடூரம்!!

அடுப்பிலிருந்து இறக்கிய கறிச் சட்டி கைதவறி கீழே வீழ்ந்தது. அதன் போது கீழே இருந்த ஒரு வயது குழந்தையில் உடலில் கொதித்துக் கொண்டிருந்த கறி ஊற்றியது. அதனால் குழந்தைக்கு உடல் முழுவதும் எரிகாயம் ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் கைதடி தெற்கில் இடம்பெற்றது.

தாய் சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அங்கு வந்த குழந்தை தாயின் சட்டையைப் பிடித்துக் கொண்டு நின்றதாகவும், அடுப்பிலிருந்த கறிச் சட்டியை இறக்கிய போது கைதவறி குழந்தையின் உடலில் கொட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எரிகாயங்களுக்கு இலக்கான குழந்தை சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணத் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது.