தனியார் பஸ் சாரதியை அடித்து கொலை செய்த பஸ் பணியாளர்கள்.

வெலிமட, பொரலந்தை பிரதேசத்தில் பஸ் தரிப்பிடத்தில் தனியார் மற்றும் அரச பஸ் பணியாளர்களிடையே இடம்பெற்ற கை கலப்பில் தனியார் பஸ் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலிமட, குருதலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

பஸ் போக்குவரத்து நேர அட்டவணை சம்பந்தமாக இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.