யாழில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்!! பெண் காயம், வாகனங்கள் சேதம்

யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தி, கல்வியற்கல்லூரி ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் குடும்பப் பெண் ஒருவர் கையில் எரிகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அத்துடன், வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஹைஏஸ் வாகனம், முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன.

இந்தச் சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்றது.


close