please wait 3 seconds...

கிளிநொச்சியில் சிறப்பாக நடைபெறும் போதை பொருள் விற்பனை!

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவுக்குட்ப்பட்ட முரசுமோட்டைக் கிராமத்தில் போதை பொருள் விற்பனை அதிகரித்துள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஐயன்கோவில், சேற்றுக்கண்டி, இரண்டாம் யுனிற், ஊரியான் ஆகிய பகுதிகளில் வைத்து போதை பொருள் விற்பனை நடைபெறுகின்றது, சிறு பொலித்தீன் பைகளில் தயார் செய்யப்பட்டு வீடுகளிலும் வீதிகளிலும் வைத்து விற்கப்படுவதாக அந்த பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

கடந்த காலங்களில் போதை பொருள் உற்பத்தி நடைபெற்று வந்தாலும் இதனை அதிகாரிகள், பொலிஸார் கண்டு கொள்ளாமையால், தற்போது போதை பொருள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன் காரணமாக குடும்ப பெண்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர் எனவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் போதை பொருள் விற்பனை மற்றும் கள்ளச் சாராயம் காய்ச்சுதல் என்பவற்றை முற்றாக ஒழிப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

close