Trending News...

தூக்கிட்டு தற்கொலை செய்த முன்னால் போராளி .

தேற்றாத்தீவு தெற்கு எல்லை வீதியில் வசித்து வந்த முன்னாள் போராளியான வைரமுத்து திசவீரசிங்கம் எனும் ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.

இவர் சில நாட்களிற்கு முன்னர் தற்கொலைக்கு முயற்சித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதை தொடர்ந்து வைத்தியர்களால் கைவிட்ட நிலமையில் தனது விட்டில் (05.12.2018) இறந்துள்ளர்.

இம் முன்னால் போராளியின் உடலில்  யுத்தத்தின் போது பட்ட காயங்களில் காணப்படும் வெடிமருந்து  துகள்கள் காரணமாக அடிக்கடி வலிப்பு நோய்கு உள்ளாவதாக குடும்பத்திர் தெரிவித்தனர்.

மிகவும் வறுமையில் உள்ள இக் குடும்பத்தினர் அன்னாரின் இறுதி கிரிகையை செய்வதற்கும் வசதியில்லாமல் தவிக்கின்றனர்.