கிளிநொச்சியில் பாரியளவு வெள்ளம். பெருமளவு இராணுவத்தினர் குவிப்பு.

கிளிநொச்சியில் நேற்றிரவு முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதேவேளை கிளிநொச்சியில் பல பகுதிகளுக்கான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வழமைக்கு மாறாக 225 தொடக்கம் 370 மில்லிமீற்றர் வரையிலான மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் இராணுவத்தினர் படகுகளுடன் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இரணைமடு குளத்தின் நீர் மட்டம் 38 அடியாக உயர்ந்துள்ளதோடு, அனைத்து வான்கதவுகளும் முழுமையாக திறக்கப்பட்டுள்ளன.