யாழில் இடம்பெற்ற கோர விபத்து! பயணித்த முதியவரின் நிலை என்ன?

யாழ்.சுன்னாகம் ரொட்டியாலடிச் சந்தியில் இரு மோட்டார்ச் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் வயோதிபரொருவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கே.கே.எஸ் வீதியால் பயணித்த குறித்த இரு மோட்டார்ச் சைக்கிள்களும் எதிரெதிர்த் திசையில் பயணித்த நிலையிலேயே மேற்படி விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்த வயோதிபர் மயக்கமடைந்த நிலையிலும், இரத்தம் வடிய வடிய அவசர அம்புலன்ஸ் வண்டி வரவழைக்கப்பட்டு வீதியால் சென்றவர்களால் காப்பாற்றப்பட்டுத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, மேற்படி விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை உடனடியாகப் பெற முடியவில்லை.