கிளிநொச்சியில் வர்த்தக நிலையங்கள் உடன் திறக்கப்பட வேண்டும். அவசர அறிவித்தல்கள் வெளியாகின.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தின் பின்னர் நாளைய தினம் அப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களை உடன் திறக்குமாறு அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பாதிப்புக்கள் தொடர்பான அவசர கலந்துரையாடல் ஒன்று நேற்று இரவு நடைபெற்றது.

கிளிநொச்சி, மாவட்ட செயலக மண்டபத்தில் இரவு 7 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இக்கலந்துரையாடல் ஆரம்பமானது.

சீரற்ற கால நிலையால் கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் இவற்றுக்கான உடனடித் தீர்வுகளையும் ,தேவைகளையும் நிறைவேற்றும் பொருட்டு இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், மேலதிக அரசாங்க அதிபர் சத்தியசீலன், கிளிநொச்சி மாவட்ட இராணுவத்தளபதி, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, அரச அலுவலகங்களின் பிரதிநிதிகள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் அரச சார்பற்ற நிறுவனகளின் பிரதி நிதிகள் எனப் பலரும் கலந்துக் கொண்டுள்ளனர்.

close