பொலிஸ் நிலையத்தில் ஜல்சா!! திருவிளையாடல் வீடியோ இது!!

திருச்சியில் நைட் டியூட்டியின் போது சப் இன்ஸ்பெக்டர் பெண் போலீஸை முத்தமிட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியை சேர்ந்த பாலசுப்பிரமணி (50) என்பவர் சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நைட் டியூட்டிக்கு சென்ற பாலசுப்பிரமணி, அங்கிருந்த பெண் பொலிஸிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென பெண் போலீஸை கட்டி முத்தமிட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டார். இது அந்த பெண் பொலிஸின் சம்மதத்துடனே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

அப்போது திடீரென உளவுத்துறை பொலிஸ் ஒருவர் காவல்நிலையத்திற்கு வந்தார். அங்கு நடந்துகொண்டிருந்த அசிங்கத்தை பார்த்து சத்தம் போட்டார். இதனால் அதிர்ந்துபோன பெண் பொலிஸ், சப் இன்ஸ்பெக்டர் தான் வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்து தகாதமுறையில் நடந்து கொண்டதாக கூறி உள்ளார்.

இதனையடுத்து அந்த எஸ்.ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் அவரிடம் நடைபெற்ற விசாரணையில், பெண் பொலிஸின் சம்மதத்துடனே இது நடைபெற்றதாக கூறினார். பின்னர் காவல் நிலைய கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் அனைத்து உண்மைகளும் அம்பலமானது.

இதனால் அந்த பெண் பொலிஸிடமும் விசாரணை நடைபெற இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஸ்டேஷனில் வைத்து காவலர்கள் இவ்வாறு கீழ்த்தரமாக நடந்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.