யாழ் மக்களுக்கு மின்சார சபை விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

யாழ் மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு இம்மாதம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

உயரழுத்தம் மற்றும் தாழழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு காரணமாக மின் விநியோக தடை முன்னெடுக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 14ம் திகதி முதல் 30ம் திகதி வரை கட்டம் கட்டமாக ஒவ்வொரு பகுதிகளிலும் மின்தடை ஏற்படுத்தப்படவுள்ளது.

அற்கமைய 14ம் திகதி யாழ் கல்லாறை பகுதியில் காலை 8.30 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்வெட்டு அமுலிலிருக்கும்.

15ம் திகதி அச்சுவேலி தோப்பு, கதிரிப்பாய், பத்தமேனி, இடைக்காடு, வளளாய், வசாவிலான், செல்வநாயகபுரம், பலாலியின் ஒரு பகுதி மற்றும் விஜிதா ஆலை ஆகிய பகுதிகளில் மின்தடை அமுல்படுத்தப்படுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.