திருநங்கையுடன் உல்லாசமாய் இருந்த பொலிஸ். கையும் களவுமாக பிடிபட்டான். (வீடியோ)

சென்னை துரைப்பாக்கம் பகுதியில் இரவு நேரத்தில் திருநங்கையுடன் காவலர் ஒருவர் இருந்ததாகக் கூறி, பொலிஸ் வாகனத்தை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர்.

சென்னை துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் நேற்று இரவு காவலர் ஒருவர், திருநங்கையுடன் பாலியல் உறவில் ஈடுபட சென்றதாக கூறி வாகன ஓட்டிகள் அவரை பிடிக்க முயன்றுள்ளனர்.

இதை கண்ட காவலர் சகதி என்றும் பாராமல் தலை தெறிக்க ஓடிய போது, அவரை துரத்தி பிடித்த வாகன ஓட்டிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவரின் இரு சக்கர வாகனத்தையும் காலால் உதைத்து கீழே தள்ளினர்.

சம்பவம் அறிந்து விரைந்து வந்த பள்ளிகரணை பொலிஸ், காவலர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி பள்ளிகரணை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரிக்காமல் அவருடைய வாகனத்தை மட்டும் காவல் நிலையத்தில் வைத்து விட்டு காவலரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் பொதுமக்களிடம் வசமாக சிக்கிய காவலரை அவர்கள் சரமாரியாக கேள்வி கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது.