யாழ் நோக்கி அதி வேக பயணத்தால் விபத்துக்குள்ளான வேன்.

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் ரக வாகனம் ஒன்று கெப்பத்திகொல்லேவ – துட்டுவெவ பிரதேசத்தில் விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் – திருகோணமலை வீதியில் 13 ஆவது மைல்கல் அருகில் நேற்று மாலை இந்த விபத்து நிகழ்துள்ளது.

மழை பெய்து கொண்டிருந்த வேளை அதி வேகத்தில் பயணித்த வேன், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளதாக எமது JaffnaBBC செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

விபத்து தொடர்பில் கெப்பத்திகொல்லேவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.