மாரடைப்பை தடுத்து இதய ஆரோக்கியத்தை பேணுவதற்கான சில குறிப்புக்கள்..!

சீனாவில் கூறும் முக்கிய பழமொழி இதயம் சிறப்பாக இருந்தால் உடல் ஆரோக்கியம் அதிகமாகும்.

இதயம் உடலிற்கு எவ்வளவு முக்கியமான உறுப்பு என்பது இதிலிருந்து தெரிகின்றது. உடலில் மிக முக்கியமான உறுப்புகளாக மூளை, இதயம், நுரையீரல், சிறுநீரகம், ஈரல் எனக் கூறுவார்கள்.

அதிலும் இதயம் மிக முக்கியமான செயற்பாடான இரத்தத்துடன் கூடிய ஒக்ஸிஜனை உடல் உறுப்புகளிற்கு வழங்குவதுடன், அவற்றை சுத்தம் செய்வதற்கும் பயன்படுகின்றது.

இந்த இதயத்தில் எதாவது கோளாறுகளோ அல்லது காயங்கள் ஏற்படும் போது அதன் ஆரோக்கியம் பாதிப்படைகின்றது. இதனால் முழு உடலின் ஆரோக்கியமும் வெகுவாக பாதிக்கின்றது.

எனவே இதய ஆரோக்கியத்தில் முன்னெச்சரிக்கையாக இருப்பது நம் ஒவ்வொருவருக்கும் அவசியமானது.

இதய ஆரோக்கியத்தை பேணுவதற்கான சில குறிப்புக்கள்.

1. மெலிந்தவர்களிற்கும் இதய நோய்கள் வருவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன,
நம்மில் பலருக்கும் உள்ள கருத்து உடல் எடை அதிகமானவர்களிற்கு தான் கொழுப்பின் அளவு அதிகமாகக் காணாப்படும் எனவே அவர்கள் அதிகமாக இதயநோய்களால் பாதிப்படைகின்றனர். ஆனால் மெலிந்தவர்களாக இருந்தாலும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவதனால் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது.

2. இதயநோயிற்கு முதல் எதிரி சீனி.
அதிகளவான் சீனி அதாவது சர்க்கரை எடுத்துக் கொள்வதனால் உடலில் இன்சுலின் அளவில் மாற்றத்தை ஏற்படுத்தி கொழுப்பை அதிகரிக்கச் செய்கின்றது. இதனால் இதய நோய்கள் ஏற்படுகின்றன.

3. மல்டி விட்டமின் இதயத்தை பாதுகாக்காது.
மல்டி விட்டமின் நிரப்பிகளை ஸிறப், அல்லது வில்லைகளாக எடுத்துக் கொள்வதனால் உடலின் ஆரோக்கியத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டாலும் இதயத்தின் ஆரோக்கியத்தைப் பேணுகின்றது.

4. கர்ப்ப காலத்தில் இதயநோய்களிற்கான வாய்ப்புக்கள் அதிகம்.
கர்ப்பகாலத்தின் போது பெண்களின் உடலில் உள்ள இரத்த நரம்புகள் அசாதாரண நிலையில் இருப்பதனால் இதய நோய்கல் வருவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்துகின்றது.

5. ரெட் வைன் இதயத்தை பாதுகாக்காது.
தினமும் இரண்டு கிளாஸ் ரெட் வைன் அருந்துவதனால் இதயத்திற்கு நல்லது எனக் கூறுவார்கள். ஆனால் இதனை தொடர்ந்து பயன்படுத்துவதனால் மதுபான பழக்கத்திற்கு அடிமயாவதுடன் இதய நோய்களையும் ஏற்படுத்தும்.

6. புகைப் பிடித்தலை தவிர்த்தல்.
புகைப்பிடிப்பதனால் உடலின் கொழுப்பு அளவு அதிகரிப்பதுடன் இரத்த நரம்புகளில் அடைப்புக்கள் ஏற்படுகின்றன. எனவே புகைப் பிடிப்பதை தவிர்ப்பது இதயத்திற்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.

7. மன அழுத்தத்தைக் குணப்படுத்தல்.
மன அழுத்தம் அதிகரிக்கும் போது இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. எனவே தியானம் யோகா போன்றவற்றின் மூலம் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதனால் இதய நோய்கள் வராமல் தடுக்க முடியும்.

8. வாய்ச் சுகாதாரத்தைப் பேணுதல்.
இதய சிறப்பு மருத்துவரிடம் சென்றால் அவர் பற்கள் மற்றும் முரசுக்களில் வீக்கம் இரத்தக் கசிவு உள்ளதா என பரிசோதிப்பார்கள். ஏனெனில் முரசுக்களில் உள்ள இரத்த நரம்புக்கள் நேரடியாக இதயத்துடன் தொடர்பு இருப்பதனால் முரசுக்கலின் ஆரோக்கியம் இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.
பயனுள்ள தகவல்களை அனைவருக்கும் பகிருங்கள்.