இரத்தம் சொட்ட சொட்ட வெறுங்காலுடன் ஓடி தங்கம் பெற்றுதந்த இளைஞன்.

எம்.மெஸ்ட் உடபுஸ்ஸலாவை யை பிறப்பிடமாக கொண்ட 36 வயதான M. சத்தியசீலன் சீனாவில் இடம்பெற்ற 24 நாடுகள் கலந்துகொண்ட ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை நாட்டுக்கான முதலாவது தங்க பதக்கத்தை வென்றுக்கொடுத்தது மட்டுமல்லாமல் மலையகத்துக்கும் பெருமையை சேர்த்துள்ளார்.

தனது காலில் போட்டுக் கொண்டு ஓடக்கூடிய ஸ்பைக் சப்பாத்தினை பெற்றுக்கொள்ள முடியாமல், வெறுங்காலில் ஓடி இரத்தம் சொட்ட சொட்ட இலக்கினை அடைந்தமை சிறப்பு.

சீனா செல்வதற்கு முதல் நாள்வரை பணத்தேவைக்காக தனது மரக்கறி தோட்டத்தில் வேலைசெய்து விட்டே பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இவரின் விடா முயற்சி வெற்றியளித்துள்ளது.

இவரின் வெற்றியில் இவரின் துணைவியார் தேவபிரியாவின் பங்கு மகத்தானது. இவரும் ஒரு சிறந்த விளையாட்டு வீராங்கணையாவார்.

எதிர்காலத்தில் மலையக இளைஞர்களை சிறந்த விளையாட்டு வீரர்களாக மாற்றுவதே எம் இலக்கு , என்பதே இத்தம்பதிகளின் கனவாக இருக்கிறது.

இவர்களுக்கு எமது JaffnaBBC செய்திச் சேவை தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது