யாழ் பல்கலைக்கழகத்தில் பகிடிவதையின் உச்சம். கழுத்தை அறுத்த மாணவன்.

கிளிநொச்சியில் உள்ள யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் வருடத்தில் பட்டபடிப்பை படித்துக்கொண்டிருக்கும் பாலேஸ்வரமூர்த்தி சுஜீவன் என்னும் மாணவன் பல்கலைக்கழகத்தில் பகிடிவதை தாங்காது வீட்டில் கழுத்தை அறுத்துள்ளார்.

அவ்வாறு கழுத்து அறுக்கப்பட்ட மாணவன் உறவினர்களால் அவசர சிகிச்சை வாகனத்தில் பளை வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இலங்கையில் பகிடிவதைக்கு எதிரான சட்டங்கள் அமுலிற்கு கொண்டு வரப்பட்ட போதும் நடைமுறைக்கு சாத்தியப்பாடாக அமையவில்லை.

யாழ் பல்கலைக்கழகம் உட்பட அனைத்து பல்கலைக் கழகங்களிலும் பகிடிவதை நடைமுறையிலேயே உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.