யாழில் வீதியைக் கடக்க முயன்றவர் விபத்தில் மரணம்.

யாழ்ப்பாணம் பண்ணைப் பாலப் பகுதியில் வீதியைக் கடக்க முற்பட்ட ஒருவரை வேகமாக வந்த உந்துருளி மோதியதில் அவர் உயிரிழந்தார் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் நகரப் பகுதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டிச் சாரதியான தனபால் (வயது-45) என்பவரே உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் பொலிஸார் தெரிவித்ததாவது:

யாழ்ப்பாணம் பண்ணைப் பாலப் பகுதியில் முச்சக்கரவண்டியை நிறுத்திவிட்டு சாரதி வீதியைக் கடக்க முற்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நகரப் பகுதியிலிருந்து ஊர்காவற்றுறை நோக்கி வேகமாக வந்த உந்துருளி அவரை மோதியது.

உந்துருளியில் பயணித்த ஒருவர் பாலத்தினுள் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தார். வீதியைக் கடக்க முற்பட்ட சாரதி உயிரிழந்தார் என்று குறிப்பிட்டனர்.