சொகுசுபஸ் யானையுடன் மோதிக் கவிழ்ந்தது!! (PHOTOS)

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி வந்த பயணிகள் சொகுசு பஸ் வண்டி இன்று அதிகாலை புத்தளம் அனுராதபுரம் பகுதியில் வீதியின் குறுக்காக வந்த யானையுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதனால் பயணிகள் பலர் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். பஸ் மோதியதில் யானையும் உயிரிழந்து வீதிக்கு அருகில் துாக்கி வீசப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இச் சம்பவம் தொடர்பாக அப் பகுதிக்கு பொலிசார் விரைந்துள்ளனர்.