காதலை ஏற்க மறுத்த பெண்: மாடியிலிருந்து கீழே குதித்து உயிரைவிட்ட இளைஞர்...(video)

பெங்களூரில் உடன் பணிபுரியும் பெண், காதலை ஏற்க மறுத்ததால் நிறுவனத்தின் 5வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்த இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HSR Layout பகுதியில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் ரோஷன் (23) என்பவர் பணிபுரிந்து வந்தார்.

அவர் தன்னுடன் பணிபுரியும் பெண்ணை ஒருதலையாக காதலித்த நிலையில் அவரிடம் காதலை கூறியுள்ளார்.

ஆனால் அப்பெண் ரோஷனின் காதலை ஏற்காத நிலையில் ரோஷன் தொடர்ந்து அவரிடம் தனது காதலை வெளிப்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அலுவலகத்துக்கு அப்பெண் வந்தபோது அவரை வழிமறித்து மீண்டும் காதலை கூறினார் ரோஷன்.

ஆனால் அவர் ஏற்க மறுத்த நிலையில் ஐந்தாவது மாடியில் இருந்து ரோஷன் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவான நிலையில் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.