12வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட மாணவி

மும்பையின் தானே பகுதியில் உள்ள 18 மாடி கட்டிடத்திலிருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தானே பகுதியில் Kolshet அருகே உள்ள ஒரு குடியிருப்பில் ஷர்மிஸ்தா ஸம் என்ற 27 வயது மாணவி தன்னுடைய பெற்றோர்களுடன் வசித்து வருகிறார்.

மருத்துவ பட்டப்படிப்பை முடித்துள்ள ஷர்மிஸ்தா, தற்போது எம்.டி பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு குடியிருப்பின் 12 மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த காவலாளி உடனடியாக பெற்றோருக்கு தகவல் கொடுத்து,ஷர்மிஸ்தாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஷர்மிஸ்தா, ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் சோதனை மேற்கொள்ளும் போது, இளம்பெண்ணின் கழுத்து மற்றும் மணிக்கட்டு பகுதியில் காயம் இருப்பதை பார்த்து, கொலை என்ற கோணத்தில் விசாரணையை ஆரம்பித்தனர்.

ஆனால் அதன் பிறகு வீட்டில் சோதனை மேற்கொள்ளும்போது ஒரு தற்கொலை குறிப்பை கண்டறிந்தனர். அதில், மனத்தளர்ச்சி காரணமாக தற்கொலை செய்வதாகவும், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மன்னித்துவிடுமாறும் குறிப்பிட்டிருந்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஷர்மிஸ்தா தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸார் கூறினர்.

இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள ஷர்மிஸ்தாவின் தந்தை சுபால், தற்கொலை செய்வதற்கு முன்தினம் இரவு, தேர்வுக்கு ஆயத்தமாகத்தால் பயமாக இருக்கிறது என எங்களிடம் மகள் புலம்பிக் கொண்டிருந்தாள். நானும் என்னுடைய மனைவியும் ஆறுதல் கூறி உறங்க வைத்தோம் என கூறியுள்ளார்.