வன்னி காட்டுப் பகுதிக்குள் நடந்த சம்பவம்!! பெண் உட்பட 3 பேர் கைது!!

வவுனியா புதூர்ப் பகுதியில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் பெண் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுவருட தினத்தன்று புதுர்ப் பகுதியில் காவல்துறையினரைக் கண்டவுடன் கையில் இருந்து பை ஒன்றினை தூக்கியெறிந்து விட்டுத் தப்பியோடினார் ஒரு நபர். மீட்கப்பட்ட பையிலிருந்து ஒரு கைத்துப்பாக்கி , 4 எறிகுண்டு , 2 கைத் தொலைபேசிகள் என பல பொருள்கள் மீட்கப்பட்டன.

இதனையடுத்து மறுநாள் புதுர்ப் பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கனகராயன்குளம் , ஆலங்குளம் , புதுக்குளம் பகுதிகளில் படையினரும் காவல்துறையினரும் இனைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்புத் தேடுதல்களிலேயே பெண் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளனர்.