பூட் சிட்டியில் துப்பாக்கி முனையில் ரூ.5 இலட்சம் கொள்ளை, CCTV காட்சிகள்

காலி – ஹிரிம்புர பிரதேசத்தில் வர்த்தக நிலையமொன்றிற்கு வருகை தந்த இருவர் அதன் ஊழியர்களை அச்சுறுத்தி பணத்தினை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

உந்துருளியில் வருகை தந்த சந்தேகநபர்கள் துப்பாக்கியொன்றை காட்டி அச்சுறுத்தி இவ்வாறு பணத்தை கொள்ளையிட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

5 இலட்சம் ரூபாய் பணம் இதன்போது கொள்ளையிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்ய காலி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த கொள்ளை சம்பவம் விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தது.