யாழில் 90 பேர் கொண்ட காவாலிகளை விரட்டிப் பிடித்த காட்சிகள்!!

வன்முறைகளில் ஈடுபடும் நோக்குடன் மோட்டார் சைக்கிள்களில் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதிக்கு வருகை தந்த இளைஞர்கள் ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் சற்றுமுன்னர் கொக்குவில் காந்திஜி சனசமூக நிலையம் முன்பாக நடந்துள்ளது.

சுமார் 30 மோட்டார் சைக்கிள்களில் 90 பேர் கொண்ட குழு, வாள்களுடன் வருகை தந்ததை அவதானித்த சிலர் ஒன்றிணைந்து அவர்களை மடக்கிப் பிடிக்க முற்பட்டனர்.

சுதாகரித்துக் கொண்ட குழுவினர் அங்கும் இங்கும் சிறதி ஓடினர். அவர்கள் 4 பேர் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். 7 மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டன.

குறித்த நபர்கள் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.