please wait 3 seconds...

It's paid ad.

கள்ளக்காதலனின் விளையாட்டு!! மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பக்கோணம் அடுத்துள்ள திட்டசேரி கிராமத்தைச் சார்ந்தவர் செந்தில்குமார் (35). இவர் கூலி தொழிலழிலாளியான இவருக்கு, கொடியரசி (வயது 24) என்ற மனைவியும், சுபாஷிணி (5) சந்தித் குமார் (3) ரேஷ்மா (1) ஆகிய மூன்று குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில்., கொடியரசிக்கும் அவரது எதிர்வீட்டில் வசிக்கும் பார்த்தீபன்(26) என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், இந்த பழக்கம் நாளைடைவில் திருட்டுக்காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இந்த காதல் விவகாரம் கொடியரசி கணவர் செந்தில்குமாருக்கும் தெரியவந்த நிலையில், கணவன் மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், புத்தாண்டு தினத்தன்று, கொடியரசிக்கு போன் செய்த பார்த்தீபன் அவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறியுள்ளார். இந்த தகவலை கேட்ட செந்தில்குமார் வழக்கம் போல கொடியரசியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், இருவருக்கும் இடையே வழக்கம் போல தகராறு ஏற்பட்டதால், பொறுமையை இழந்த செந்தில்குமார், நிம்மதியில்லாத வாழ்க்கையை வாழ்வதை விட இறப்பதே மேல் என்று விரக்தியில் இருந்துள்ளார்.

இந்நிலையில் அதிகாலையில் எழுந்த செந்தில்குமார், திடீரென தூங்கிக்கொண்டிருந்த தன் மனைவி கொடியரசியின் கழுத்தை அறுக்க முயன்றுள்ளார், இதனால் அதிர்ச்சியடைந்த கொடியரசி, அலறிய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் ஓடி வந்துள்ளனர். அங்கு கொடியரசி ரத்த வெள்ளத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த நிலையில், இதனை கண்ட கணவர் செந்தில் குமார் அங்கிருந்த மதுபாட்டிலை உடைத்து தன்னைத்தானே குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனால் அதிா்ச்சியடைந்த அக்கம்பக்கததினர், தொடர்ந்து இருவரையும் மீட்டு உடனடியாக கும்பக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்துவிட்டு, சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

close