சைக்கிளுடன் மோதி நொறுங்கியது கார். எந்த நிறுவனத்தின் கார் தெரியுமா?

சைக்கிள் மோதியதன் காரணமாக விலை உயர்ந்த கார் ஒன்று நொறுங்கி போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சைக்கிளுக்கு எதுவுமே ஆகாத சூழலில், நொறுங்கிய கார் எந்த நிறுவனத்துடையது? என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைக்கூடும்.

சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள நகரங்களில் ஒன்று ஷென்சன். இப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் சைக்கிள் ஒன்றை வைத்துள்ளார். சமீபத்தில் வழக்கம் போல தனது சைக்கிளில் அவர் பயணம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது கார் ஒன்றின் முன் பகுதியில் அவரது சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதி விட்டது. உடனே சைக்கிளில் வந்த இளைஞருக்கு என்ன ஆனது? சைக்கிள் சுக்குநூறாக நொறுங்கி போயிருக்குமே என்ற சந்தேகங்கள்தான் அனைவரது மனதிலும் எழும்.

ஆனால் நடந்தது வேறு. இந்த விபத்தில் நொறுங்கி போனது சைக்கிள் அல்ல. கார்தான்! மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக, சைக்கிள் மோதியதில், காரின் முன்பக்க பம்பர் அப்படியே நொறுங்கி விட்டது. அதே நேரத்தில் சைக்கிளுக்கு எதுவுமே ஆகவில்லை.

உடனே இந்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவ தொடங்கின. ஆனால் ஆரம்பத்தில் பலர் இதனை நம்ப மறுத்து விட்டனர். இவை வழக்கம்போல் பரவும் போலியான புகைப்படங்கள்தான் என்றே பலர் நினைத்து கொண்டிருந்தனர்.

ஆனால் இந்த விவகாரம் உள்ளூர் போலீசாரின் காதுகளை எட்டியதும், உடனடியாக அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். தற்போது இந்த விபத்து நடைபெற்றது உண்மைதான் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சைக்கிள் மோதியதால் காரின் முன்பக்க பம்பர் நொறுங்கியதாக பரவிய தகவலும் உண்மைதான் என்பதையும் போலீசார் உறுதி செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் விபத்து நடைபெற்றது தொடர்பான வீடியோ ஒன்றையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

பேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.