அக்கா எங்கட முறுக்கு வேணுமா?? நல்ல முறுக்கு!! வவுனியாவில் நடக்கும் கேவலம்.

வவுனியா தர்மலிங்கம் வீதியில் உள்ள பிரபல ஆடையகம் ஒன்றில் கணவனுடன் சென்ற பெண்ணிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய ஊழியரால் பதற்றம் கடந்த 31.12.2018 அன்று இரவு 8மணியளவில் புதுவருடத்திற்காக ஆடைகள் கொள்வனவு செய்வதற்காக இளம் தம்பதிகள் தர்மலிங்கம் வீதியில் உள்ள ஆடையகம் ஒன்றிற்கு சென்றுள்ளனர்.

இதன் போது கணவர் தனக்கு ஆடை எடுப்பதற்காக ஆண்கள் உடை இருக்கும் பிரிவில் ஆடைகளை பார்த்துக்கொண்டிருந்த வேளை மனைவி பெண்களுக்குறிய பகுதியில் தனக்கு ஆடைகளை தெரிவு செய்துள்ளார் இதன்போது குறித்த பெண்ணிடம் ஆடைகளை காட்டிக்கொண்டிருந்த குறித்த கடையின் ஊழியர் உணவு பண்டமான முறுக்கிணை உண்டுகொண்டு “அக்கா முறுக்கு வேணுமா..? எங்கட முறுக்கு நல்ல முறுக்கு சாப்பிடுங்க..? எங்கட முறுக்க சாப்பிட மாட்டீங்களா..?” என்று இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசியுள்ளார்.

இதன் போது குறித்த பெண் எதிர்த்து பேசிவிட்டு கணவனிடம் சென்றுள்ளார் எனினும் கணவரிடம் நடந்தவற்றை கூறினால் அவ்விடத்தில் பிரச்சினை வந்துவிடும் என்ற அச்சத்தில் கணவனிடம் கூறாமல் மறு நாள் காலை கணவனிடம் கூறியுள்ளார் இதனை தொடர்ந்து குறித்த கணவன் எமது செய்தியாளரையும் அழைத்துக்கொண்டு குறித்த கடைக்கு இன்று சென்று வாய்த்தர்க்கத்தில் ஈடுப்பட்டு கடுமையாக எச்சரித்துள்ளார்.

இதன்போது கடையின் உரிமையாளர் மன்னிப்பு கோரியதும் நிலைமை சுமூகமடைந்தது எனினும் குடும்ப பெண்ணின் மற்றும் குடும்ப நலன் கருதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செயாது கணவர் சென்றுவிட்டார் இதேவேளை குறித்த விடயத்தை எமது செய்தியாளர் நகரபிதா மற்றும் வர்த்தக சங்கத்தின் கவணத்திற்கும் கொண்டு சென்றுள்ளதை அடுத்து அவர்கள் இதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை எதிர்வரும் கிழமையில் வவுனியா நகரில் உள்ள ஆடையகங்களில் பெண்கள் பிரிவில் பெண்களை பணியாளராக கட்டாயம் நியமிக்க வேண்டும் என்ற நகரசபையின் அறிவித்தல் அமுலுக்கு வரவுள்ளதும் குறிப்பிடத்தக்கது எமது பெண்கள் இவ்வாறான கடைகளை புறக்கணிக்க கூறி எவ்வளவு தான் விமர்சகர்கள் கூறினாலும் எமது பெண்களும் மாறுவதாக தெரியவில்லை புலம்பெயர் நாட்டில் உள்ள எம் உறவுகள் என்றாலும் இதனை புரிந்து கொண்டு உங்கள் குடும்பங்களுக்கு அறிவுரை கூறி அவர்களை மாற்ற வேண்டும் என சில சமூக நலன் விரும்பிகள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது