மதுபானசாலையில் மாணவர்களின் வவுச்சர்கள் விற்பனை.

கல்வி பயிலும் மாணவர்களுக்கு சீருடை மற்றும் காலணிக்கான வவுச்சர்கள் அரசினால் வழங்கப்பட்டு வருகின்றமை வரவேற்கத்தக்க விடயமாகும்.

ஆனாலும் பெருந்தோட்ட பகுதிகளில் அந்த வவுச்சர்களை மதுபானசாலைகளில் விற்பனை செய்து மது அருந்துகின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசு வழங்கும் இத்திட்டத்தை நமது சமூகம் தவறான முறையில் பயன் படுத்துகின்றது.

இவ்வாறு மதுபான சாலைகளில் கொண்டு சென்று மது அருந்தும் நபர்களை மதுபானசாலை உரிமையாளர்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்து சட்ட நடவடிக்கை எடுக்க உதவ முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.