உடல் ரீதியாக நான் பட்ட கஷ்டங்களை விபரிக்க முடியாது. பிரபல டிவி நடிகை

இந்தி தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலனமான நடிகையாக வலம்வரும் டினா தத்தா தன்னுடைய 5 வருட காதலை முறித்து கொண்டதற்கான காரணம் குறித்து தனியார் தொலைக்காட்சியில் பேசியுள்ளார்.
இந்தி தொலைக்காட்சியில் தயான் எனும் நிகழ்ச்சியில் ஜான்வி என்னும் கதாபாத்திரத்தின் மூலமாகவும், பியர் பேக்டார் எனும் ரியாலிட்டி ஷோ மூலமாகவும் மிகவும் பிரபலமானவர் டினா.

இவர் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொந்தரவுகள் பற்றி பேசினார்.

அப்போது தன்னுடைய 5 வருட காதலன் தனக்கு கொடுத்த துன்பங்கள் குறித்து பேசிய அவர், உங்களுக்கு என்னை ஒரு பிரபல நடிகையாக தான் தெரியும். ஆனால் நான் தொலைக்காட்சியில் நடிக்க ஆரம்பிப்பதற்கு முன்னே ஒரு நபரிடம் காதல் வயப்பட்டேன்.

தெரிந்த தோழியின் மூலம் அவர் அறிமுகமானார். நான் தான் அவரிடம் காதலை கூறினேன். 5 வருடமாக காதலித்தோம். அதன் பிறகு முறிந்துவிட்டது.

காதலை தொடர நான் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன். ஆனால் அவர் எனக்கு அதிகமான சித்ரவதைகளை கொடுத்தார்.

உடல் ரீதியாக, மன ரீதியாக அவர் கொடுத்த தொந்தரவுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுவான். ஒருமுறை என்னுடைய நண்பர்கள் முன் வைத்து என்னை அடித்தான். அதனால் தான் நான் காதலை முறித்துக்கொண்டேன் என தெரிவித்துள்ளார்.