யாழில் மருத்துவ சான்றிதழ் பெற காத்துக் கிடக்கும் மக்கள். யார் காரணம்?

யாழில் மருத்துவ சான்றிதழ் பெறுவதற்காக தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்திற்கு முன்னால் மக்கள் காத்துக்கிடக்கின்றனர்.

சாரதி அனுமதிப் பத்திரம் எடுப்பதற்கான மருத்துவ சான்றிதழ் பெறுவதற்கு யாழ். தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்துக்கு வரும் மக்கள்
ஒரு நாள் காத்துக்கிடந்து மருத்துவ சான்றிதழை பெற்றுச் செல்வதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

இதனால் அதிகாலை 5 மணிக்கு வந்து இடம்பிடிக்க வேண்டியுள்ளதாகவும்
அன்றைய தமது கடமைகள் தடைப்படுவதாகவும், வேலை விடுமுறை எடுத்து வந்து நிற்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட தரப்பினர் இதில் கவனம் எடு்த்து இந்த நடைமுறையை இலகுபடுத்துமாறு கேட்டு நிற்கின்றனர்.

மேலும் இதனை பயன்படுத்தி சில காவாலிகள் பணம் தாருங்கள். உங்களுக்கு டோக்கன் தருகிறோம் என ஏமாற்றி அங்கு வரும் மக்களிடம் பண மோசடியும் செய்கின்றனர்.

முன்னர் இவ் நிறுவகத்தில் குறிப்பிட்ட அளவு டோக்கன்கள் மட்டுமே வழங்கப்பட்டது. அதனால் மக்கள் பல இடரினை சந்தித்தனர். அதனை நிவர்த்தி செய்து இப்பொது வரையறை இல்லது டோக்கன் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் 9 மணிக்கு போனாலும் மருத்துவ சான்றிதழ் எடுக்க கூடிய நிலை இப்பொது உள்ளது.

ஆனாலும் முன்னர் மருத்துவ சான்றிதழ் பெற்ற நபர்களும் பண மோசடி செய்ய எதிர்பார்க்கும் நபர்களாலும் அதிகாலை 5 மணிக்கே பொய் நின்றால் தான் மருத்துவ சான்றிதழ் பெற முடியும் என்ற பொய்யான தகவல் பரப்ப படுகிறது.

அதனால் காலை 5 மணிக்கே மக்கள் வந்து காத்து நிக்கிறார்கள். இது தேவை அற்றதொன்று.