மந்திர சக்தியால் யானையை கட்டுப்படுத்த முயற்சித்த நபர் மரணம். வீடியோ

நபரொருவரை காட்டு யானையொன்று தாக்கும் காணொளி தற்சமயம் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

கதிர்காமம் – வெஹேரகல நீர்த்தேக்கத்திற்கு அருகில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மந்திர சக்தியால் யானையை கட்டுப்படுத்த முயற்சித்த வேளையே அந்நபர் இவ்வாறு காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரையும் இழந்துள்ளார்.

கதிர்காமம் – வல்லிமாவத்தை பகுதியை சேர்ந்த நபரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பலவீனமானவர்கள் கீழே உள்ள காணொளியை பார்வையிட வேண்டாம்.