இலங்கையில் புதுமணத் தம்பதிக்காக களமிறங்கிய பொலிஸ் படை!

தம்புள்ளையில் புதுமணத் தம்பதியரின் திருமண மோதிரம் காணாமல் போன நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர்.

தேவஹுவ ஏரியில் குளிக்க சென்ற தம்பதியின் மோதிரம் காணாமல் போன நிலையில் பொலிஸ் குழுவினர் மற்றும் நீர் விளையாட்டு உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட நீண்ட போராட்டத்தின் பின்னர் மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கல்லேவெல, வஹாகோட்டை பிரதேசத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்த தம்பதி ஒன்று ஏரியில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். இதன் போது மணமகனின் கையில் இருந்த மோதிரம் நீரில் விழுந்து காணாமல் போயுள்ளது.

மோதிரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் பொலிஸ் படை ஒன்றே நீரில் இறங்கி தேட ஆரம்பித்துள்ளது. அதற்கமைய 20 அடி ஆழத்தில் இருந்து இந்த மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டு உரிய தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் இந்த சேவை குறித்து ஆச்சரியமடைந்த தம்பதி, இந்த மோதிரம் மீண்டும் கிடைக்கும் என ஒரு போதும் நினைக்கவில்லை என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.