பனைமரத்தில் தலைகீழாக பிணமாக தொங்கியபடி கிடந்த தொழிலாளி.. தீயணைப்புத் துறையினரின் செய்த அலட்சியம்

ஊத்தங்கரை அருகே பனை மரத்தில் பதநீர் இறக்கும் போது உயிரிழந்த தொழிலாளியின் உடலை தீயணைப்புத்துறையினர் அலட்சியாக மீட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கஞ்சனூர் பகுதியை கணேசன் என்ற தொழிலாளி பதநீர் இறக்குவதற்காக அப்பகுதியில் உள்ள பனை மரத்தில் ஏறியுள்ளார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மரத்தின் மீதே அவர் உயிரிழந்தார். அதனை கண்ட அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் பொக்லைன் எந்திர உதவியுடன் பனை மரத்தை வெட்டி உடலை கீழே இரக்கச் செய்தனர்.

தீயணைப்புத்துறையினர் அலட்சியத்துடன் செயல்பட்டு தொழிலாளியின் உடலை மீட்டதாக உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் வேதனை தெரிவித்தனர். பின்னர் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீயணைப்புத் துறையினரிடம் பெரிய அளவிலான ஏணி உள்ளிட்ட உபகரணங்கள் இல்லாததே இதற்கு காரணம் என அவர்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.